பட்டாபிராம் டாஸ்மாக் கடையில் வாலிபருக்கு அடி : ஒருவர் கைது
ஆவடி: டாஸ்மாக் கடையில் வாலிபரை அடித்தவர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த பட்டாபிராம் கிழக்கு கோபாலபுரம் முல்லை நகரை சேர்ந்தவர் முருகன் (35). பெயின்டர். கடந்த 22ம்தேதி பட்டாபிராம் சிடிஎச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது, கக்கன்ஜி நகரை சேர்ந்த சங்கர், முரளி, இவர்களது நண்பர் திருமுல்லைவாயல் பாஷா ஆகியோர் அங்கு வந்தனர். அனைவரும் மது குடித்தனர். பின், முருகன் வெளியே வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள் முருகனிடம் தகராறு செய்து தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த முருகன் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை (30) கைது செய்தனர். அவரை திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.