அண்ணனூர் டாஸ்மாக்கில் மதுவில் தண்ணீர் கலந்து விற்ற சேல்ஸ்மேன் சிறையில் அடைப்பு
ஆவடி : மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் சிறையில் அடைக்கப்பட்டார். அவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பதாக சென்னை மாநகர கமிஷனர் திரிபாதிக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்பேரில், மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் நெடுமாறன், திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எஸ்.எம்.முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பிராந்தி பாட்டில்களை திறந்து தண்ணீர் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை விற்பனை யாளரான திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (31) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தண்ணீர் கலந்த 4 பிராந்தி பாட்டில்கள், 6 காலி பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகத்தை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.