வடகொரியா மிரட்டல் தென்கொரிய தலைநகர் சியோலை 3 நிமிடத்தில் சாம்பலாக்குவோம்
சியோல் : தென் கொரிய தலைநகர் சியோலை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று வடகொரிய ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த 1950ம் ஆண்டு உள்நாட்டு கலவரத் துக்கு பின் ஒருங்கிணைந்த கொரியா, வடகொரியா , தென் கொரியா என பிரிந்தன. தென் கொரியா ஜனநாயக ரீதியிலும், வடகொரியா கம்யூனிச கொள்கையிலும் செயல்பட தொடங் கின. அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது. இந்நிலையில், வடகொரியா சமீபத்தில் ராக்கெட் சோதனை நடத்தியது. அது தோல்வியில் முடிந்தாலும், ஏவுகணை சோதனை நடத்துகிறது என்று தென் கொரியா புகார் தெரிவித்தது. மேலும், வடகொரிய தலைவர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரிய ராணுவம், வடகொரியாவின் புகழை கெடுக்கும் வகையில் தென் கொரிய அதிபர் லீ மியுங்பக் பல மாதங்களாக பேசி வருகிறார். தொடர்ந்து அவமானப்படுத்தினால் சியோலை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இரு நாட்டுக்கும் இடையில் மீண்டும் போர் மூளும் அபா யம் உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.