கெய்ல் புயல் வேகத்தை சமாளிக்குமா ராஜஸ்தான்?
ஐபிஎல் சீசன் 5 போட்டியில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் பலம்வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இந்த 3 போட்டிகளிலும் கெய்லின் புயல் வேக ஆட்டத்தினால் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
பெங்களூர் அணியில் கெய்ல், டிவிலியர்ஸ், விராத் கோக்லி ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர். ஆனால் ராஜஸ்தான் அணியில் இந்த ஐபிஎல்5 சீசனில் அதிக ரன் குவிப்பில் உள்ள ரகானே உள்ளார். பந்துவீச்சில் மிரட்ட சித்தார்த் திரிவேதி இருக்கிறார். அதிரடியில் மிரட்டும் ஓவிஸ்ஷா, ஹாக் ஆகியோரும் உள்ளனர். பெங்களூர் அணியிலும் ஜாகீர்கான், வெட்டோரி, வினய்குமார் ஆகியோர் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும்.