சிவில் இன்ஜி. டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழக அரசுத்துறையில் வேலை
தமிழக அரசின் டவுன் பிளானிங் துறையில் டிராப்டஸ்மென்- கிரேடு நிலை-3 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
மொத்த இடங்கள்:17.
தகுதி: டவுன் மற்றும் கன்ட்ரி பிளானிங் பிரிவில் டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது ஆர்க்கிடெக்சுரல் அசிஸ்டென்ட்ஷிப் பிரிவில் டிப்ளமோ முடித்து சிவில் இன்ஜினியரிங்கில் 3 வருட பணிஅனுபவம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு கட்டணம் ரூ.130/- ஐ ஆன்லைன் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
செலான் மூலமும் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளங்களில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் கள் இ மெயில் ஐடி உடையவராக இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: மே 4. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 2. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 23.