காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் கூட்டம் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்பாஸ், நிர்வாகி ஐஸ்வர்யா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிஜே கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘இளைஞர் காங்கிரசில் கடந்தாண்டு 14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தாண்டு அதைவிட அதிகமாக சேர்க்க வேண்டும். வரும் 26ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிது.
காங்கிரசில் கடுமையான உழைப்பாளிகள், நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் ஆட்சியை அமைக்க முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இருட்டில் தமிழகம் தவிக்கிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே இளைஞர் காங்கிரசின் லட்சியம் என்றார். கூட்டத்தில், நிர்வாகிகள் மாடசாமி, கஜேந்திரன், நரசிம்மராஜ், கலீல், பழனி, பன்னீர் மற்றும் கவுன்சிலர் சீனிவாசன், ஜெய்சங்கர், வெங்கடேசன் கலந்துகொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook