Untitled Document
2012
22
Apr
பேட்டிங், பவுலிங்கில் கங்குலி கலக்கல் : புனேயிடம் டெல்லி சரண்டர்


ஐபிஎல்லில் நேற்று இரவு பெரோஷா கோட்லா மைதானத்தில் டெல்லி , புனே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த புனே 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. ரைடர் 58 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 86 ரன் விளா சினார். கங்குலி 35 பந்தில் 1 சிக்சர், 5 பவுண்டரியுடன் 41 ரன்னும், ஸ்டீவன் ஸ்மித் 13 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 34 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் மோர்னே மோர்க்கல் 3 விக்கெட் வீழ்த்தினார். அவர் வீசிய 4 ஓவர்களில் 50 ரன்கள் விளாசப்பட்டது. சுழற்பந்து வீச் சாளர் நதீம் வீசிய 4 ஓவர்களில் 44 ரன்கள் எடுக்கப்பட்டது. இமாலய இலக்குடன் ஆடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஜெயவர்த்தனே 7 ரன்னில் தாமஸ் பந்தில் அவுட்டானார். எனினும் சேவாக், பீட்டர்சன் அதிரடியில் மிரட்டினர். 32 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 57 ரன் விளாசிய சேவாக், முரளிகார்த்திக் அவரிடமே பிடிகொடுத்து அவுட்டானார்.

பீட்டர்சனை 32 ரன்னில் கங்குலி போல்டாக்கினார். பீட்டர்சன் 23 பந்தில் 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்து களமிறங்கிய இர்பான் பதானையும் 15 ரன்னில் கங்குலி பெவிலியனுக்கு திருப்பினார். நிகி 8 ரன்னில் ரன்அவுட் செய்யப்பட்டார். டெய்லர் 12, நகார் 24 ரன்களில் தாமஸ் பந்துகளில் வீழ்ந்தனர். முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே டெல்லி சேர்த்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் தாமஸ் 3, கங்குலி 2, முரளிகார்த்திக் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வந்த டெல்லி அணிக்கு இந்த தோல்வி அதிர்ச்சியாக அமைந்தது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய கங்குலி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். புனே அணிக்கு இது 4வது வெற்றியாகும். டெல்லி அணி 2வது தோல்வியை சந்தித்துள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,