நார்வே இயக்குனர் படத்தில் : திஷா பாண்டே
நார்வே நாட்டை சேர்ந்த இயக்குனர் தமிழ் படம் இயக்குகிறார். நார்வே நாட்டை சேர்ந்தவர் இயக்குனர் ஸ்ரீகந்தராஜா. இவர் ‘சிக்கிமுக்கி’ என்ற தமிழ் படத்தை இயக்குகிறார். இதுபற்றி கூறியதாவது: மனைவி, குடும்பத்தைப்பற்றி நினைக்காமல் எந்நேரமும் பணம் என்று குறியாக இருக்கிறார் டாக்டர் கணவர். இதனால் மனைவியின் குணம் மாறுகிறது. தன் மீது அன்பு காட்டுபவர்களை தேடுகிறாள். அதன்பிறகு நடப்பது என்ன என்பதே கதை. டாக்டர் வேடத்தில் நார்வேயை சேர்ந்த நடிகர் நடித்திருக்கிறார். மனைவியாக புதுமுகம் பூஜா நடிக்கிறார்.
ஹீரோ ரித்தேஷ். ஹீரோயின் திஷா பாண்டே. இவர் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். கஞ்சா கருப்பு, சூரி, நார்வே நகுலன், ரோமன் நடித்துள்ளனர். ஆர்.செந்தில்குமார் தயாரிக்கிறார். லியோ.டி ஒளிப்பதிவு. கவுதம் இசை. சென்னை மற்றும் மலேசியாவில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஏற்கனவே ‘என்னவோ பிடிச்சிருக்கு’, ‘எழுதியது யாரடி’ என்ற படங்களை தயாரித்திருக்கிறேன். ‘சிக்கி முக்கி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன்.