ஆயுத தொழிற்சாலையில் ஸ்டோர் கீப்பர் வேலை
ஆந்திராவில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. ஸ்டோர் கீப்பர்: 10 இடங்கள் (பொது6, எஸ்சி2, ஓபிசி1, மாற்றுத் திறனாளி1). சம்பளம்: ரூ.5,200 20,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பில் ஞிளிணிகிசிசி அங்கீகாரம் பெற்ற ‘‘0’’ கிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்ப தாரர்கள் எழுத் து, நேர்முகத் தேர்வு அடிப் படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.50/ இதை டிடி அல்லது போஸ்டல் ஆர்டராக எடுக்கவும். டிடியை மைய கோட் எண் 2537ல் மாற்றத்தக்க வகையில் செலுத்தவும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மார்ச் 31 ஏப்ரல் 6 தேதியிட்ட எம்ப்பளாய்மென்ட் நியூசை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.21