Untitled Document
2012
13
Apr
ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த பெண் கைது


சென்னை : ஆவடி கோவில்பதாகை கலைஞர் நகரை சேர்ந்த டி.விமல்நாஜ் என்பவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், வேலூர் அடுக்கம்பாறையை சேர்ந்த விஜயபானு (34) என்பவர், தன்னை போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி, பத்திரிகையாளர் என்று கூறி பலரிடம் பணம், நகை மற்றும் சொத்துகளை அபகரித்துள்ளார். வேலூர் ஜெயில் வார்டனாக இருக்கும் எனது தங்கையிடம் ரூ.3 லட்சம் ஏமாற்றி வாங்கி கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த, கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி விஜயபானு என்ற பெண்ணை கைது செய்தனர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றார். சிறையில் இருந்து வெளியே வந்த விஜயபானு, ஐபிஎஸ் அதிகாரி என்று நடித்து பலரை ஏமாற்றி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொண்டு நிறுவனம் ஆரம்பித்து மோசடி செய்துள்ளார். இவருக்கு துணையாக, அவரது மாமா தேவரசன் (52), நண்பர் மதிவாணன் இருந்தது தெரிய வந்தது. இவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,