விளாசலில் அதிர்ந்தது மைதானம் சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரை எதிர்த்து ஆடியது. முதலில் பேட் செய்த பெங்களூர் 205 ரன்கள் குவித்தது. கெய்ல் 68, கோக்லி 57, அகர்வால் 45 ரன் விளாசினர். இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னைக்கு டூபிளசிஸ் நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தார். 71 ரன்கள் விளாசி அவர் ஆட்டமிழந்தார். ரெய்னா 23, டோனி 41 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 2 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோக்லி வீசிய 19வது ஓவரில் மோர்க்கல் ருத்ரதாண்டவம் ஆடினார். அந்த ஓவரில் அவர் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் விளாசி அதிர வைத்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப் பட்டது. முதல் பந்தில் 1 ரன் அடிக்கப்பட்டது. அடுத்த பந்தில் மோர்க்கல் அவுட்டானார். அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரி, சிக்சர் அடித்து பிராவோ அசத்தினார். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் ஜடேஜா அருமையாக ஆடி சிலிப் திசையில் பவுண்டரி விளாசி வெற்றியை பறித்தார். கடந்த 2008ல் ஐதரா பாத் அணிக்கு எதிராக 214 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி எட்டி வெற்றி பெற்றது. அதன்பிறகு தற்போது சென்னை அணி இமாலய இலக்கை அடைந்து சாதித்துள்ளது.