மின் உற்பத்தியில் என்எல்சி சாதனை
நெய்வேலி : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குனருமான ஏ.ஆர்.அன்சாரி அளித்த பேட்டி: இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தியில் 16 சதவீதமும், மின் உற்பத்தியில் 19 சதவீதமும் வளர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளோம். மொத்த உற்பத்தியில் 44 சதவீதமும், லாபம் 65 சதவீதமும் அதிகம் பெற்றுள்ளோம். அனல்மின் நிலையங்கள் கடந்த நிதி ஆண்டில் 1581 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின்சக்தியை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. என்எல்சி நவரத்னா விருதை பெற்றதையடுத்து மகா ரத்னா விருது பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.