ரயில்வே துறையில் 6500 பணியிடங்கள்
மத்திய ரயில்வே துறையில் 1403 சீனியர் செக்ஷன் இன்ஜினியர்கள், 4784 ஜூனியர் இன்ஜினியர்கள், 160 சூபர்வைசர் கள், 37 சீப் டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு உள்பட மொத்தம் 6500 இடங்களுக்கு பிளஸ் 2, டிகிரி, இன்ஜினியரிங், முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ஓசி மற்றும் ஓபிசியினர் ரூ.60க்கு போஸ்டல் ஆர்டர் அல்லது டிடி எடுக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்குwww.rrbbbs.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.24.