| |||||
|
2012
29
Mar ![]() திருச்சி :முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், இன்று காலை காரில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கல்லணை அருகே வீசிவிட்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் (48). திருச்சி தில்லைநகர் 10,வது கிராசில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜனனி மினரல்ஸ், கேர் பொறியியல் கல்லூரி உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார். அரசியலில் நேருவுக்கு உறுதுணையாக இருந்தார். கடந்த மக்களவை தேர்தலின்போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட திமுகவில் சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இன்று அதிகாலை 5.10 மணிக்கு ராமஜெயம் வாக்கிங் சென்றார். 7 மணி வரை அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் வழக்கமாக ஷட்டில் ஆடும் இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கும் வரவில்லை என தெரிந்தது. இதுபற்றி சென்னையில் இருந்த நேருவுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் பலரிடம் போனில் விசாரித்துள்ளார். ராமஜெயம் மீது பல வழக்குகள் இருப்பதால் போலீசார் அவரை கைது செய்திருக்கலாம் என கருதி போலீசிலும் விசாரித்தனர். அவர் கைது செய்யப்படவில்லை என தெரிந்தது. இதனால், குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். அரசியல் மற்றும் தொழில் போட்டியில் ராமஜெயத்தை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சினர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
karthick - chennai
3/29/2012 -- 18:12:43 அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன் muthuraman.pl - chennai
3/30/2012 -- 13:16:49 ரத்தக் கண்ணீர் படத்தில் வரும் குற்றம் பற்றிய ஒரு பாட்டுத்தான் நினைவு வருகிறது VISWANATHAN - TRICHY
3/30/2012 -- 14:5:25 இது ஒரு கொடுவுற செய்தி , எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
|
|