Untitled Document
2012
23
Mar
கன்டெய்னர் லாரி மீது கார் மோதல் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்


திருவொற்றியூர் : சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோட்டை சேர்ந்தவர்கள் தீனதயாளன் (32), ராஜீ (33). இருவரும் நண்பர்கள். ராஜீயின் உறவினர்கள் மீஞ்சூரில் உள்ளனர். அவர்களை பார்க்க இருவரும் நேற்று மாலை காரில் சென்றனர். காரை ராஜீ ஓட்டினார்.

திருவொற்றியூர் அருகே சாத்தாங்காட்டில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி லாரிக்குள் புகுந்து நொறுங்கியது. படுகாயம் அடைந்த இருவரும் அலறித் துடித்தனர். விபத்தை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
மாதவரம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் மீட்டனர். அதற்குள் தீனதயாளன் பரிதாபமாக இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த ராஜீயை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,