ஆந்திராவில் இருந்து மணல் கடத்திய லாரி, டிராக்டர் பறிமுதல்
ஊத்துக்கோட்டை : ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக மணல் கடத்தப்படுகிறது என்று ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், எஸ்ஐ குமரன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர்.ஆந்திராவில் இருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டர் டிரைவர், போலீசாரை பார்த்ததும் வண்டியை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அதன் பின்னால் வந்த லாரியை போலீசார் சுற்றிவளைத்தனர். அதில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. லாரி, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் தெய்வீகன் (24) கைது செய்யப்பட்டார்.கடத்தல்காரர்கள் காரில் வருவது தெரிந்தது. அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வந்த செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த துரைராஜ் (25) விஜய் (20), சோழவரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (20), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த புரூஸ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.