சென்னை : பண்டக காப்பாளரை மிரட்டி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஜவுளிக்கடை அதிபர் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ஜரிகை நிறுவனத்தில் உதவி பண்டக காப்பாளராக வேலை பார்த்து வருபவர் புண்ணியக்கோட்டி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் டி.எம்.சில்க்ஸ் உரிமையாளர் சம்பத் இவரை தொடர்பு கொண்டு, “உன் மேல் காஞ்சிபுரம் விஜிலன்ஸில் புகார் உள்ளது. எனக்கு விஜிலன்ஸ் அதிகாரி தெரியும் எனக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி புண்ணியக்கோட்டியு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ம்தேதி அவருக்கு சம்பத் மீண்டும் போன் செய்து, உன் மீது விசாரணை இன்னும் முடியவில்லை என்று கூறி ரூ.2 லட்சம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் புண்ணியக்கோட்டி தன்னால் ரூ.10 ஆயிரம்தான் தரமுடியும் என்று கூறியுள்ளார். பணத்தை சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் வந்து தரும்படி சம்பத் கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புண்ணியகோட்டி புகார் செய்தார். அதன்படி நேற்று முன்தினம் புண்ணியக்கோட்டி கலங்கரை விளக்கம் அருகில் வைத்து சம்பத்திடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.பின்னர் சம்பத் சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook