Untitled Document
2012
23
Mar
கள்ளக்காதலால் மைத்துனி கொலை தலைமறைவாக இருந்த அத்தான் சிக்கினார்


ஆவடி :  திருமுல்லைவாயலில் கள்ளக்காதலால் ஏற்பட்ட தகராறில் மைத்துனியை கொலை செய்த அக்கா கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல் கலைஞர் நகர் 2வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் கல்பனா (21). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் துப்புரவு சூபர்வைசராக பணி யாற்றி வந்தார். அக்கா கணவர் சரவணனுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால், இவரது கணவர் மகேஷ்பாபு பிரிந்து சென்றுவிட்டார்.இதற்கிடையே, தன்னுடன் வேலை செய்யும் ஒரு வரை 2வது திருமணம் செய்ய கல்பனா முடிவு செய்தார். இதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரவ ணன், கல்பனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடிவந்தனர். சரணவன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் சரவணன் கூறியிருப்பதாவது:
கல்பனா அழகாக இருப்பாள். அவள் மீது எனக்கு மோகம் ஏற்பட்டது. எப்படியாவது அவளை அடைய வேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகும்  கல்பனாவை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு போவேன். அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவரை பிரிந்த கல்பனா, 2வது திருமணம் செய்ய முயன்றார். எனக்கு ஆசை நாயகியாக  தொடர்ந்து இருக்கும்படி கூறினேன். மறுத்ததால் அவளை கொலை செய்துவிட்டு தப்பினேன்.இவ்வாறு சரவணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,