இ.யூனியன் முஸ்லிம் லீக் 65வது ஆண்டு விழா இன்று மாலை நடக்கிறது
சென்னை : சென்னை எழும்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 65வது ஆண்டு விழா இன்று மாலை நடக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 65வது ஆண்டு நிறுவன நாள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த வெற்றி விழா மாநாடு எழும்பூர் சிராஜ் மஹாலில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. மாநில செயலாளர் கமுதி பஷீர் தலைமை தாங்குகிறார்.வடசென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், ஏ.எச்.எம்.இஸ்மாயில், பூவை முஸ்தபா, ஏ.எச்.ஹைதர் அலிகான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். செயலாளர் கே.எம்.ஏ. சத்தார் வரவேற்புரையாற்றுகிறார். தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எஸ்.ஏ.ஷாஜகான், துணை தலைவர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அக மது, முன்னாள் எம்எல்ஏ ஆம்பூர் அப்துல் பாசித் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.