Untitled Document
2012
19
Mar
சுமோ கவிழ்ந்து ஒருவர் பலி டிரைவர் ஓட்டம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே நடுரோட்டில் சுமோ கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். அவருடன் வந்தவர்களும் டிரைவரும் ஓடிவிட்டனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோளூர் காந்தி நகரை சேர்ந்தவர் பிரசாத். டிராவல்ஸ் நடத்துகிறார். இவரது சுமோ காரில் 8 பேர் சென்னைக்கு வந்தனர். டிரைவர் ரவிச்சந்திரன் காரை ஓட்டி வந்தார். திருவள்ளூர்  பூந்தமல்லி சாலையில் முருக்கஞ்சேரி பகுதியில் இன்று அதிகாலை கார் வந்தது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோபால் (30) என்பவர் அந்த இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்தவர்களும் டிரைவரும் ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவல்படி, மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், டிரைவர் ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,