Untitled Document
2012
19
Mar
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கழிவறை சுத்தம் செய்யும் அவலம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

திருப்பூர் : திருப்பூர் காங்கயம் ரோடு மணியகாரன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 450 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி நேரத்தில், மாணவ, மாணவிகளை பள்ளி வளாகம் மற்றும் கழிவறையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள்  ஈடுபடுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். மாணவிகள் காலை பள்ளிக்கு வந்தவுடன் வகுப்பறைகள் மற்றும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது முதல் வேலையாக உள்ளது. தண்ணீர் பிடித்து வைப்பது, கழிவறைக்கு தண்ணீர் எடுத்து ஊற்றுவது, சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய வைப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘பள்ளிக்கென தனியாக ஆயா, வாட்ச்மேன் கிடையாது. வகுப்பறை சுத்தம் செய்யும் பணியை, மாணவர்கள் விருப்பத்துடன்தான் மேற்கொள்கின்றனர். மாணவர்கள் ஒத்துழைப்புடன், பள்ளியை சுத்தமாக வைத்திருக்கிறோம். மாணவர்களின் படிப்பு இதனால் கெடுவதில்லை’’ என்று கூறினர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பள்ளி நேரத்தில், எந்த மாணவரையும் ஆசிரியர்கள் வேலை செய்ய வற்புறுத்த கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படும் புகார் குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்யப்படும். வகுப்பு நேரத்தில், மாணவர்கள் வேலை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
Nagu - chennai
3/20/2012 -- 9:36:59

அந்த பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்தால் கிராம புற மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துவார்கள் ............................

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,