இந்தியாவுக்கு ஹசீனா கோரிக்கை தீஸ்டா பிரச்னைக்கு விரைவில் தீர்வு
தாகா : தீஸ்டா நதிநீர் பங்கீடு தொடர்பாக இந்தியா வங்கதேசம் இடையே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேச பயணம் மேற்கொண்டார். அப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தீஸ்டா நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தால் மேற்குவங்கம் கடுமையாக பாதிக்கப்படும். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார். இதையடுத்து ஒப்பந்தம் நிறைவேறவில்லை.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய ஹை கமிஷனர் பங்கஜ் சரண் நேற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். அவரிடம், Ôதீஸ்டா நதிநீர் பிரச்னையை விரைவில் தீர்த்து ஒப்பந்தம் கையெழுத்தாக நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று பங்கஜ்ஜிடம் ஹசீனா கேட்டுக் கொண்டார்.