இலங்கைக்கு எதிரான தீர்மானம் பிரதமர் மன்மோகனுடன் ஞானதேசிகன் சந்திப்பு
சென்னை : இலங்கையில் நடந்த போரில் மனித உரிமை மீறல் குறித்த தீர்மானம் ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. அதை நிறைவேற்ற மத்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் இன்று காலை 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். பின்னர் ஞானதேசிகன் கூறுகையில், ‘‘அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் வெளியுறவு துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா உள்ளிட்டவர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்’’ என்றார்.