ஏதுமற்ற எங்களுக்கு ஒரு இடம் கொடுங்கள் : சங்கரன்கோவிலில் வைகோ பிரசாரம்
சங்கரன்கோவில் : ஏதுமற்ற எங்களுக்கு ஒரு இடம் கொடுத்தீர்கள் என்றால் விசுவாசத்தில் உங்களுக்காகவே பணியாற்றுவோம் என்று சங்கரன் கோவிலில் வைகோ பிரசாரம் செய்தார். சங்கரன்கோவில் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: எங்கிருந்தாலும் தமிழக உரிமைகளை பாதுகாக்க போராடும் எங்களுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள். சங்கரன்கோவில் தொகுதியில் கும்மிருட்டு வேளையில் பெண்கள் முற்றம் தெளிப்பதற்கு முன்பாகவே வீட்டின் வாசற்படிகளில் வேட்டி, சேலையுடன் ஒரு டோக்கன் வைக்கப்படுகிறது. அந்த டோக்கனை உரியவரிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். மக்கள் கஷ்டப்படும் போது இவர்கள் வந்தார்களா? பணம் கொடுத்தார்களா? கமிஷன் மூலம் கிடைத்த பணத்தை நம் வாக்கை வாங்குவதற்கு தருகிறார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். தன்னலமற்று போராடும் மதிமுகவிற்கு வாய்ப்பு தாருங்கள். ஏதுமற்ற எங்களுக்கு ஒரு இடம் கொடுத்தீர்கள் என்றால் விசுவாசத்தில் உங்களுக்காகவே பணியாற்றுவோம். இவ்வாறு வைகோ பேசினார்.