சங்கரன்கோவில் தொகுதியில் 2&ம் இடத்துக்குதான் போட்டி : நடிகர் ராமராஜன் பேச்சு
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும். இப்போது நடப்பது யாருக்கு இரண்டாவது இடம் என்ற போட்டி தான் என்று நடிகர் ராமராஜன் பேசினார்.
அதிமுக வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் சங்கரன்கோவில் தொகுதியில் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: விஜயகாந்தின் நடிப்பு எங்களுக்கு தெரியும். அவருடைய பெயர் விஜயராஜ். அப்போது இவருக்கு படம் இல்லாததால் கொடி கட்டிப் பறந்த ரஜினிகாந்தின் பெயரை உல்டா செய்து தனது பெயரை விஜயகாந்த் என மாற்றியவர்தான் அவர். சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும். இப்போது நடப்பது யாருக்கு இரண்டாவது இடம் என்ற போட்டி தான். நாட்டுக்காக உழைக்கக் கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா தான். இவ்வாறு ராமராஜன் பேசினார்.