கெய்ல் அவுட் தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் கெய்ல் தென் ஆப்ரிக்க உள்ளூர் 20-20ல் டால்பின் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். காயம் குணமடையாததால் இந்த தொடரில் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் தகுதி ஒலிம்பிக் போட்டியில் 20 கி.மீ. நடைஓட்டத்திற்கு பஞ்சாப் வீரர் பல்ஜிந்தர்சிங் தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் அவர் 1.22.12 நிமிடத்தில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.
விழிப்புணர்வு பிரசாரத்தில் சச்சின் வரும் 31-ம் தேதி புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘டபிள்யூடபிள்யூஎப் இந்தியா’ என்ற அமைப்புடன் இணைந்து சச்சினும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறார்.
பாக். அணிக்கு அபராதம் ஆசியகோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதாக பாக். அணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அந்த அணி 2 ஓவர்கள் குறைவாக வீசியது. இந்த விவகாரம் தொடர்பாக பாக். அணி வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காலிறுதியில் ஜோகோவிக் அமெரிக்காவின் இந்தியன் வேல்ஸ் நகரில் நடந்து வரும் டென்னிசில் நம்பர்1 வீரரான செர்பியாவின் ஜோகோவிக் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் தென் ஆப்ரிக்காவின் ஆண்டர்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் ஷரபோவா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் ஷிமோனாவை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook