மாற்றுத்திறனாளி பற்றிய கதை
சென்னை: விண்மீன்கள் பட இயக்குனர் விக்னேஷ் மேனன் கூறியதாவது: வயிற்றிலிருக்கும் சிசுக்கு சில காரணங்களால் மூளைக்கு ஆக்ஸிஜன் போகாததால் குறைபாடுள்ளவைகளாக பிறக்கின்றன. இதை செரிபெரல் பால்ஸே என்று கூறுகிறார்கள். இதுபற்றி இன்னும் படங்கள் வந்ததில்லை என்பதால் இதை மையமாக வைத்து கதை உருவாக்கினேன். இதுபற்றி டாக்டர்களிடம் ஆலோசித்ததோடு இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்படி தங்களது வாழ்க்கையை வாழ்கின்றன என்பதை நேரடியாக சென்றும், அவர்களின் வீடியோ காட்சிகளையும் பார்த்தேன். அப்போது பட ஹீரோ ராகுல் ரவீந்தரும் வந்திருந்தார். ஷூட்டிங் செல்வதற்கு முன் இந்த கேரக்டரில் நடிக்க பயிற்சி எடுத்தார். பாண்டியராஜன், விஷ்வா, ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.