Untitled Document
2012
02
Mar
இடைத்தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் இதுவரை ரூ 23 லட்சம் பறிமுதல்


சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து தொகுதிக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 6 கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பறக்கும் படையினர், வருவாய்த்துறையினர் மற்றும் அதிரடிப் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மதிமுக கூட்டத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயலிடம் தேவர்புரம் செக்போஸ்டில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் நேற்று சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது நெல் வியாபாரி ஒருவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள 6 சோதனை சாவடிகளில் இதுவரை ரூ.23 லட்சத்து 70 ஆயிரம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடும் சோதனை இருந்தாலும் புறநகர் பகுதிகளில் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாவா மும்முரமாக நடப்பதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவிலில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் தங்கள் வாகனங்களில் அனுமதி பெற்றே கட்சி கொடிகளை கட்ட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நேற்று புளியங்குடி சாலையில் அனுமதி பெறாமல் அதிமுக கொடியுடன் சென்ற காரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விஜயகாந்த் பிரசாரம்

சங்கரன்கோவில் தேர்தலுக்கு 16 நாட்களே உள்ளதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், சங்கரன்கோவில் தொகுதியில் 6 நாட்கள் முகாமிட்டு கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நாளைமறுதினம் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், 28 எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். அதன்பிறகு 5ம் தேதி முதல் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரசாரத்துக்காக நடிகை, நடிகர் பட்டாளமும் குவிய தொடங்கி உள்ளது. திமுக வேட்பாளரை ஆதரித்து குஷ்பு, வாகை சந்திரசேகர், குமரி முத்து ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்காக சமக தலைவர் சரத்குமார், நடிகர் செந்தில் வாக்கு சேகரிக்கிறார்கள். 

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
rajan - sankarankovil
3/2/2025 -- 15:53:37

sankarankovil இடைதேறில் அதிதிமுக படம் கண்பிகவேண்டும் ,தயவு தேது அதிதிமுக போட்டதிக இலையென்றால் தமிழ்நாடு மக்களின் வாயாறு எரித்து போகும் ,யாருக்கு நள்ளும் பொட்டுகள் பஸ் ,வேலை உயரு ....

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,