காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய நகர திமுக சார்பில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு ஒன்றிய செயலாளர் இரா.நாகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ கே.சுந்தர் கலந்துகொண்டு 160 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் 160 பேருக்கு இனிப்புகளும் 1000 பேருக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சுந்தர், நிர்வாகிகள் ஏழுமலை, உதயசூரியன், மனோகரன், சுப்பராயன், மணி, நீலகண்டன், சுந்தர், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 24வது வார்டு செயலர் வி.எஸ் ராமகிருஷ்ணன் தலைமையில் கொடியேற்றி 160 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர் சன் பிரான்ட் ஆறுமுகம் தலைமையில் கொடியேற்றி லட்டு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் 51 வார்டுகளிலும் நேற்று இனிப்புகள் வழங்கப்பட்டன. 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 60 பேருக்கு வேட்டி, சேலையும் வழங்கப்பட்டன. 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருவள்ளூர் குருகுலத்தில் உள்ள 160 குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு அ.சேகர் தலைமை வகித்தார். அவைத் தலைவர் கந்தசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் வி.ராஜேந்திரன், கவுன்சிலர்கள் வீனஸ் உதயகுமார், பாலவிநாயகம், நிர்வாகிகள் சந்துரு, கந்தவேல், ரவிக்குமார் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook