| |||||
|
2012
25
Feb சென்னை : சென்னை வேளச்சேரியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை போலீசார் நடத்திய என்கவுன்டரில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகள் மூலம், அவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. அடையாள அட்டையில் இருந்த முகவரியில் விசாரித்தபோது, அங்கு அதே பெயரில் வேறு நபர்கள் இருப்பதும் போலீசார் கைப்பற்றியது போலி அடையாள அட்டைகள் என்பதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை கும்பல் தலைவனாக செயல்பட்ட வினோத்குமார் என்பவனின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் அடிக்கடி பேசப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டனர். கொள்ளையனின் உறவினர் ஒருவர் பேசினார். என்கவுன்டர் நடத்தப்பட்டது பற்றி அவரிடம் கூறிய போலீசார், சென்னை வந்து உடலை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வினோத்குமார் என்று அடையாளம் காணப்பட்டவனின் அப்பா, சித்தப்பா, தங்கை 3 பேரும் நேற்று நள்ளிரவு விமானத்தில் சென்னை வந்தனர். போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். கமிஷனரிடம் அவர்கள் கூறியதாவது: எங்கள் மகன் பெயர் அஜய்குமார் ராய். அவனை நண்பர்கள் எல்லோரும் வினோத்குமார் என்றுதான் அழைப்பார்கள். அஜய்குமார், நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தான். பிசினஸ் விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி நண்பர்களுடன் செல்வான்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
abu - chennai
2/25/2012 -- 13:34:5 nandri NITHY - CHENNAI
2/25/2012 -- 15:34:7 தண்டனை கடுமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் பயபடுவர்கள். தி POLICE........ VETTAI THODARATUM. VAIMAYE VELLUM.
|
|