|
|||||
|
கடந்த ஆண்டில் 40 ஆயிரம் பேரை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் சேவை
கருத்துகளை தெரிவிக்க சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், நேற்று சாலை பாதுகாப்பு விழா நடத்தப்பட்டது. பாதுகாப்பு அடங்கிய புத்தகம் மற்றும் குறும்படங்களை போக்குவரத்து ஆணையர் ராஜாராம் வெளியிட, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பெற்றுகொண்டார். பின் போக்குவரத்து ஆணையர் ராஜாராம் பேசும்போது, ÔÔநாட்டில் அதிக வாகனங்கள் உள்ள முதல் மாநிலமாக மகாராஷ்டிரா, 2வது மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசால் இயக்கப்படும் இலவச ஆம்புலன்ஸ் 108 மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 40,000 பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு உலகில் சாலை விபத்துகளால் 12 லட்சம் பேர் இறக்கின்றனர். நம் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 50 லட்சம் பேர் விபத்துகளில் காயமடைகின்றனர். எனவே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறதுÕÕ என்றார். மேலும் சில
|
|