Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2011
08
Dec
கலைவண்ணம்.. கலக்கல் வருமானம் !

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பரிசுப்பொருட்களாக வழங்குகிறோம். இவற்றை இணைத்து புதுவிதமாக, கலைநயத்துடன் கூடிய பரிசுப்பொருளாக வழங்கினால் அனைவரையும் ஈர்க்கும். இதையே தொழிலாக மேற்கொண்டால், வீட்டில் இருந்தபடியே வருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த உமாதேவி. அவர் கூறியதாவது:  கல்லூரி படிப்பை முடித்தது முதலே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திருமணத்துக்கு பிறகு கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து தையல், ஓவியம், பரிசு பொருட்கள், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். பரிசுப்பொருள் தயாரிப்பை ஒரு வாரத்தில் கற்றேன். ஓவியத்தில் ஆர்வம் இருந்ததால், ஓவியம், சிற்பத்திறமையை இணைத்து பரிசு பொருட் களை செய்து பார்த்தேன்.

அதை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்தேன். அது அவர்களை கவர்ந்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பரிசுப்பொருட்களை தயாரித்து தருமாறு கூறினார்கள். நாளடைவில் இதற்கு உள்ள வரவேற்பை பார்த்து, இதையே தொழிலாக செய்யலாம் என்று கணவர் யோசனை கூறினார். அதன்படி பல்வேறு பரிசு பொருட்களை தயாரித்து எனது பகுதியில் உள்ள பரிசு பொருட்கள் விற்கும் கடை களில் காட்சிக்கு வைத்தேன். அது விற்பனையானது. கடைக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு பரிசு பொருட் களை செய்து தருமாறு ஆர்டர் கொடுத்தனர். வீட்டு வேலை போக மீதமுள்ள நேரங்களில் தொடர்ந்து தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறேன். பயிற்சி மையங்களில் மற்றவர்களுக்கு கட்டண முறையில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். இத்தொழிலை துவங்க முதலீடு பெரிய அளவில் தேவை இல்லை. பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் தயாரிக்கலாம். புதுப்புது வடிவத்திற்கேற்ப விற்பனை அதிகரிக்கும்.


முதலீடு: முதல்கட்ட உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம், அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும். உற்பத்தி செலவு: தினசரி 3 மணி நேரத்தில் ஒரு போர்டு வீதம் மாதம் 30 போர்டுகள் தயாரிக்கலாம். இதற்கு தேவையான போர்டு விலை ரூ.1,200, வெள்ளை களிமண் (எம்.சீல்) ரூ.720, பேர்ல் மற்றும் பேப்ரிக் கலர் பெயின்ட் பாக்ஸ் ரூ2,500, எனாமல் கலர் ரூ.300, சாக் பவுடர் ரூ.1,225, இதர செலவுகள் ரூ.300 என மொத்தம் ரூ.6,245 செலவாகும். உற்பத்தி செலவு கலை வடிவத்திற்கு ஏற்ப மாறும். பெயின்ட், சாக் பவுடர் ஆகியவை ஓரளவு மீதமாகும் வாய்ப்புள்ளது.

வருவாய்: சிற்ப ஓவிய போர்டு ஒவ்வொன்றையும் குறைந்தபட்சம் ரூ.300க்கு விற்கலாம். இதன் மூலம் மாத வருவாய் ரூ.9,000. செலவு போக மாதம் ரூ.3 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இது தினசரி 3 மணி நேரத்திற்கு கிடைக்கும் உழைப்பு கூலியாக, மாத வருவாயாக எடுத்து கொள்ளலாம். கூடுதல் நேரம் ஒதுக்கி தினசரி மேலும் 2 போர்டுகள் செய்தால், மாத லாபம் ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை கிடைக்கும். மேலும் படைப்பின் அழகு, வசீகரத்திற்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் வரை கூட விலை நிர்ணயித்து விற்கலாம். லாபம் பல மடங்கு கிடைக்கும்.

சந்தைவாய்ப்பு: பரிசு பொருட்களுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்புகள் அதிகம். பிறந்த நாள், திருமணநாள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு பரிசு பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஓவிய சிற்ப பரிசு பொருட்களின் புதுவித வடிவமைப்புகள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
 தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் விற்பனை அதிகம் இருக்கும். கைவினை திறனுள்ள ஆட்களை நியமித்து பரிசுப் பொருட்களை அதிகளவில் தயாரித்தால் முக்கிய நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பலாம். பயிற்சிக்கு: மாவட்ட தலைநகரங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மகளிர் குழு அமைப்புகள் பரிசு பொருட்களுக்கான பயிற்சியை வழங்குகிறது. தனிப்பட்ட முறையிலும் சிலர் பயிற்சி அளிக்கிறார்கள். ஓவியம், கலை உணர்வு இருந்தால் 2 வாரத்தில் கற்றுக்கொள்ளலாம்.

தயாரிப்பது எப்படி?

கார்டுபோர்டை ஏ4 சைஸ் அல்லது தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ள வேண்டும். பசையை தடவி சாக் பவுடரை தூவி நிரப்ப வேண்டும். சற்று காய்ந்ததும், அதில் வெள்ளை களிமண்ணை தேவையான உருவங்களில் வடிவமைத்து ஒட்ட வைக்க வேண்டும். அது கடவுள், பூக்கள், கார்ட்டூன் என எந்த உருவமாகவும் இருக்கலாம்.  அவற்றை மீண்டும் நன்றாக காயவைத்த பின்பு, போர்டு மற்றும் உருவத்தின் மீது எனாமல், பேர்ல், பேப்ரிக் ஆகிய பெயின்ட் வகைகளில் ஒன்றை பிரஷ் மூலம் வண்ணம் பூச வேண்டும். எந்தெந்த இடங்களில் எந்த வண்ணம் பூச வேண்டும் என்பது முக்கியம். சில இடங்களில் குறிப்பிட்ட நிறங்களை தான் பயன்படுத்த வேண்டும். வண்ணம் பூசிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் காயவைத்து, அதன் மீது வார்னிஷ் அடித்து 2 மணி நேரம் காய வைத்தால் கார்டுபோர்டு சிற்ப ஓவியம் தயாராகிவிடும்.  கார்டு போர்டில் உருவத்தை நாமே உருவாக்குவதற்கு பதில் ரெடிமேடு உருவங்களையும் பொருத்தி, புதிய வடிவத்தை உருவாக்கலாம். சில போர்டுகளுக்கு பார்டர் தேவைப்படும். அதற்கேற்றாற்போல் சாக்பவுடர், பசை, வெள்ளை களிமண் (எம்.சீல்) கொண்டே பார்டர் உருவாக்கலாம்.

போர்டுக்கு பதிலாக ஜார்களிலும் இதே பாணியில் ஓவிய சிற்பம் உருவாக்கலாம்.  கட்டமைப்பு: வீட்டில் நாம் பயன்படுத்தும் அறையே போதுமானது. தரையிலோ, டேபிள் சேர் மீது அமர்ந்தோ தயாரிக்கலாம். தயாரித்த பொருட்களை இருப்பு வைக்க வீட்டின் ஷெல்ப் அல்லது பெட்டி போதும். தேவையான பொருட்கள்: கார்டுபோர்டு, சாக் பவுடர், வெள்ளை களிமண்(எம் சீல்), எனாமல் பெயின்ட், பல வகை பிரஷ்கள், பசை, வார்னிஷ் மற்றும் பல்வேறு வண்ணங்களில் பேர்ல் மற்றும் பேப்ரிக் பெயின்ட். கிடைக்கும் இடங்கள்: டிராயிங் ஸ்டேஷனரி கடைகள் அனைத்திலும் கிடைக்கும்.

கருத்துகளை தெரிவிக்க
senthil vadivu - coimbatore
1/2/2025 -- 23:16:24

it is really super. pl help me. how to conduct Mrs.Umadevi.

pastlin - cuddalore
3/7/2025 -- 10:10:46

நான் இந்த முறைகளை படித்து சந்தோஷபட்டேன் நானும் சுயதொழில் செய்து சம்பாதிப்பேன் என மனதில் உறுதி கொண்டுள்ளேன் ஆனால் எனக்கு எலெக்ட்ரிக் டைலரிங் mechine (சின்னது) வாங்க ஆசை அது எவ்வளவு , எங்கு கிடைக்கும் என எனக்கு உதவவுங்கள் ப்ளீஸ்

AMALORBAVA MARI - KARUR
4/29/2012 -- 18:35:47

ரொம்ப யூஸ் புல்லா இருக்கு.

Suresh - Erode
12/10/2025 -- 17:36:5

நல்ல விசயங்களை பகிர்தல் ரொம்ப நல்லது, நானும் இந்த தகவல்களை உடன் இறுபவர்கள்ளிடம் பகிர்ந்து கொள்கிறேனே....

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement