இந்திய கிரிக்கெட் அணி யின் கேப்டனான டோனி ராஞ்சியில் கிரிக்கெட் அகாடமி அமைக்க விரும்பினார். உலககோப்பையை இந்திய அணி வென்றதும் நடந்த பாராட்டு விழாவின் போது ஜார்க்கண்ட் விளையாட்டுத்துறை அமைச்சர் சுதேஷ்மகதூ, டோனிக்கு சிமாலயாவில் 12.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என அறிவித்தார். அவர் அறிவித்த இந்த நிலம் இளைஞர் நலன் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டோனிக்கு இந்த நிலத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படியே மறுபடியும் நிலத்தை ஒதுக்குவது என்றால் அதற்கான காலஅவகாசம் சில ஆண்டுகள் நீடிக்கும். இதனால் அகாடமி அமைக்கும் டோனியின் கனவு தற்சமயத்திற்கு அந்தரத்தில் ஊசலாடுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook