நெல்லை : அத்வானியை கொல்ல மதுரை திருமங்கலம் அருகே குண்டுவைத்த வழக்கில் அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான ‘போலீஸ்‘ பக்ருதீனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் நெல்லையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து 5 தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர். பா.ஜ. தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டார். அக்டோபர் 27ம் தேதி அத்வானி மதுரையில் இருந்து ரதயாத்திரை செல்லும் வழியில் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலம் அடியில் அவரை கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக மதுரை நெல்பேட்டையை சேர்ந்த அப்துல்ரஹ்மான் என்ற அப்துல்லா (26), சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத் (22) ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட அமைப்பான அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி போலீஸ் பக்ருதீன் தலைமையில் 10க்கும் அதிகமானோர் அடங்கிய கும்பல் இந்த சதி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை 5 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் போலீஸ் பக்ருதீன் உள்பட 4 பேர் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் நெல்லை, கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர். நெல்லையில் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning