தெலுங்கு பட வாய்ப்பு அனுஷ்கா உதறியது ஏன்? : தமன்னா கேள்வி ?
சென்னை : தெலுங்கில் தயாராகும் ‘ரிபெல்’ என்ற படத்தில் இருந்து அனுஷ்கா விலகியதால் அவருக்கு பதிலாக தமன்னா நடிக்கிறார். அருமையான வாய்ப்பை அனுஷ்கா இழந்துவிட்டதாக தமன்னா கூறினார். தமிழ், தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. கோச்சடையானில் ரஜினி ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கில் ஹீரோ பிரபாசுடன் ‘ரிபெல்’ என்ற படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டார். பின்னர் திடீரென்று விலகினார். அந்த வேடத்தில் தற்போது தமன்னா நடிக்கிறார். இதுபற்றி தமன்னா கூறியதாவது: ‘ரிபெல் படத்தின் ஸ்கிரிப்ட் கேட்டேன். அற்புதமாக இருந்தது. உடனே ஓகே சொன்னேன். இவ்வளவு அருமையான படத்தில் இருந்து அனுஷ்கா ஏன் விலகினார் என்று தெரியவில்லை. நல்ல வேடத்தை அவர் மிஸ் செய்துவிட்டார். தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் தமிழ் படத்தில் நடிக்க உள்ளேன். இவ்வாறு தமன்னா கூறினார்.