ரசிகர்கள் மீது நடிகர் கோபம்
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
நடிப்புக்கு குட்பை சொல்லிட்டு இல்லறத்துல என்டராக முடிவு பண்ண¤ன நயனதுக்கு சினிமாகாரங்க தர்ற பிரஷர் தாங்கலையாம்... தாங்கலையாம்... வர்மாவான இயக்கம், ராமர் கதையை பல மொழியில எடுக்க¤றாராம். அதுல ராமரா நடிக்க¤ற நாக நடிகரோடு திரும்ப சீதையா நடிக்க நயனுக்கு அழைப்பு விட்டிருக்காராம். நடிகை பதில் எதுவும் சொல்லலையாம்... சொல்லலையாம்...
சுள்ளான் ஹீரோவோட பாட்டை இனிஷியல் நடிகரோட ரசிகருங்க கண்டமேனிக்கு திட்டி டுவிட்டர்ல எழுதுறாங்களாம்... எழுதுறாங்களாம்... இதைப் படிச்ச இனிஷியல் நடிகரு, ‘பாட்டு எழுதறதுக்கும் பாடுறதுக்கும் எல்லோருக்கும் உரிமை இருக்கு. அதை கிண்டல் பண்ணக்கூடாது. கிண்டல் பண்ணவங்க மேல நான் கோபமா இருக்கேன்Õனு ரசிகர்களை கடிந்து கொண்டாராம். நடிகரோட கோபம் உண்மைதானான்னு ரசிகர்களுக்கே டவுட்டா இருக்காம்... டவுட்டா இருக்காம்...
பார்ட் 2 படத்துல சில ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகளை இயக்கம் வெச்சாராம். இதுல டூப் போடாம நடிச்சா தத்ரூபமா இருக்கும்னு தல நடிகர்கிட்ட இயக்கம் சொன்னாராம்... சொன்னாராம்... இந்த ஆக்ஷன் காட்சிகளே படத்துக்கு தேவையில்லைன்னு நடிகரு ரிஜெக்ட் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...