சின்னமனூர் : வீட்டில் ரீடிங் எடுக்க சென்ற மின் ஊழியர், பெண்களை கட்டிப் பிடித்து சில்மிஷம் செய்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ளது சீலையம்பட்டி. சின்னமனூர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு பிரிவில் பணியாற்றி வரும் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் சீலையம்பட்டியில் ரீடிங் எடுக்க நேற்று வந்தார். அப்போது ஒரு வீட்டில் மீட்டர் பெட்டி உயரமான இடத்தில் இருந்தது. உடனே அந்த ஊழியர், அந்த வீட்டில் இருந்த பெண்ணை சேரில் ஏறச் செய்து மீட்டர் எவ்வளவு ஓடியிருக்கிறது என பார்க்க சொன்னார்.
அந்தப் பெண்ணும் சேரில் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த அந்த ஊழியர் திடீரென அந்தப் பெண்ணை கட்டியணைத்து முத்தம் தர முயன்றாராம். அதிர்ச்சியில் அந்தப் பெண் அலறினார். உடனே அங்கிருந்து வெளியேறிய அந்த ஊழியர் பக்கத்து தெருவில் உள்ள மற்றொரு வீட்டுக்கு சென்றார். அங்கும் மின் ரீடிங் எடுப்பது போல், அங்கிருந்த பெண்ணை திடீரென கட்டிப்பிடித்தார். அவரிடம் இருந்து திமிறி விடுபட்ட அந்தப் பெண், வீட்டில் கிடந்த துடப்பத்தை எடுத்து அந்த ஊழியரை சரமாரியாக அடித்தார்.
அடிவாங்கியபடி அந்த ஊழியர் வெளியே தப்பியோடி வந்தார். அதற்குள் முதலில் ஊழியரால் சில்மிஷம் செய்யப்பட்ட பெண் ஊரில் தகவல் சொல்லி பொதுமக்களை திரட்டிக் கொண்டு வந்தார். இதையடுத்து அந்த ஊழியரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். மெயின் சாலையில் இருந்த ஒரு சலூனில் சிறை வைத்தனர். அப்போது அந்த ஊழியர் ஊரார் காலில் விழுந்து தன்னை மன்னித்து விடும்படி மன்றாடினார். இதையடுத்து பொதுமக்கள் அவரை எச்சரித்து விரட்டினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook