Untitled Document
2011
13
Feb
தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை


சிவகங்கை, & தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளில் வருவாய்த்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் தேர்தல் பணிகளில் அனைத்துத்துறை பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கான பெயர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் தயாரித்துள்ளனர். ரேண்டம் முறையில் தேர்தல் பணிக்கான இடமும், அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சில பணியாளர்கள் நோய், விசேஷ காரியங்கள், நெருங்கிய உறவினர்களுக்கு உடல்நிலை சரியில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, தேர்தல் பணிகளில் இருந்து தங்களை விடுவிக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் கோரி வருகின்றனர். துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதால், பட்டியலை மாற்ற முடியாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இதற்கிடையில் தேர்தல் பணிகளில் ஈடுபட மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது அவருக்கு குடிமைப்பணி 17ஏ பிரிவுகளின்படி ஒரு வருடத்திற்கான ஊதிய உயர்வை ரத்து செய்யலாம் அல்லது சஸ்பெண்ட் செய்யலாம். தேவைப்பட்டால் பணி நீக்கம் கூட செய்யலாம். அதேபோல் 17பி பிரிவுகளின்படி 3 மாதம் முதல் 3 வருடத்திற்கான ஊதிய உயர்வை ரத்து செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
MATHAVAN - ERODE
2/20/2011 -- 16:44:6

உங்கள் சேவை அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me