தமிழ் முரசு செய்தி எதிரொலி புழல் சிறை குடியிருப்பு பூங்கா பராமரிப்பு பணி தொடங்கியது
புழல் : தமிழ் முரசுÕ செய்தி எதிரொலியாக புழல் சிறைசாலை குடியிருப்பு பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி இன்று துவங்கியது. புழல் மத்திய சிறைஅருகே போலீஸ் குடியிருப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இதனால், சிறுவர்கள் விளையாடவும் பெரியவர்கள் வாக்கிங் போகவும் வசதியாக இருந்தது. ஆனால் பல மாதங்களாக பூங்காவை பராமரிக்காமல் விட்டு விட்டனர். பூங்காவில் உள்ள ராட்டினம், சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்டவை பயன்படுத்த முடியாமல் ஆகிவிட்டது. இதுபற்றி சில தினத்துக்கு முன் Ôதமிழ்முரசுÕ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். சிறைத்துறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், ஜெயிலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இன்று காலை பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் மேற்பார்வையில் நூற்றுக்கும் அதிகமான போலீசார், பூங்காவை சுத்தப்படுத்தினர். காட்டுச்செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ‘‘இனி சனிக்கிழமை தோறும் பூங்கா சுத்தப்படுத்தப்படும்ÕÕ என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் கூறினார்.