உலக அளவில் கடல்சார் தொழில்களில் வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. ஊதியமும் கைநிறைய கிடைக்கிறது. இதனால் கடல்சார் படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கடல்சார் பாடப்பிரிவுகளை தொடங்கி வருகின்றன. சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் ஒரு வருட டிப்ளமோ படிப்புக்கு தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. ஞிவீஜீறீஷீனீணீ வீஸீ ழிணீutவீநீணீறீ ஷிநீவீமீஸீநீமீ (ஞிழிஷி) என்ற ஒரு வருட டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கான கல்வி, வயது, உடற்தகுதி உள்ளிட்ட விவரங்களை ஷ்ஷ்ஷ்.வீனீu.tஸீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதளத்தில் பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொது நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும்.
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்படிப்பில் சேரும் மாணவர்கள் இதே பல்கலைக்கழகத்தில் கடல்சார் அறிவியல் துறையில் பிஎஸ்சி படிப்பிற்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படிப்பு முடிந்தவுடன் பிஎஸ்சி படிப்பில் அனுமதிக்கப்படுவர். இதற்கான நுழைவுத் தேர்வு வரும் டிச.18ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.450) செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆக்ஸிஸ் வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும். பணம் செலுத்துவதற்குரிய Ôசெலான்Õ படிவத்தை இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
www.imî.tn.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள், கட்டண செலான் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப கவரின் மீது ‘Application form for Diploma in Naîtical Science Coîr‡e Leading to BSc degree‘ என குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் நவ.30ம் தேதிக்குள் ‘Indian Maritime Univer‡ity, Ea‡t Coa‡t Road, Uthandi, Chennai 600 119‘ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook