இயக்குனருடன் நெருக்கமா? நடிகை தந்த விளக்கம்!
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
மதுஷாலு ஹீரோயினும் வர்மா இயக்கமும் நெருக்கமா பழகுறதா வந்த கிசுகிசுவை வர்மா மறுத்தாராம்... மறுத்தாராம்... கொஞ்சம் இடைவெளி விட்டு இப்போ மதுவான ஹீரோயினும் வாய் திறந்திருக்காராம்... திறந்திருக்காராம்... வர்ம இயக்கத்தோடு நடிகைகளை இணைத்து பேசுறது புதுசு கிடையாது. அதெல்லாம் தெரிஞ்சுதான் அவர் படத்துல நடிக்கிறேன்னு நடிகை விளக்கம் தர்றாராம்... தர்றாராம்...
சுகன்யமான ஹீரோயினுக்கு பிலிம்ல வாய்ப்பு இல்லாததால கட்டுப்பாடில்லாம சாப்பிட்டு உடல் எடை ஏறிடுச்சாம்... ஏறிடுச்சாம்... இந்த நேரத்துல, டோலிவுட்ல பால ஹீரோ படத்துல 3 ஹீரோயின்ல ஒருவரா நடிக்க சான்ஸ் வந்துச்சாம். வாய்ப்பை நழுவ விடாம கப்புன்னு பிடிச்சிட்டாராம். இப்போ டயட், உடல்பயிற்சி, யோகான்னு நேரம் காலம் பார்க்காம பயிற்சி பண்ணி வெயிட்டை குறைக்க போராடுராறாம்...
போராடுறாராம்...
பிரபல பாடல்கள்ல வந்த ஹம்மிங்கை வச்சி டியூன்போட்ட கண்ணான இசை, மறுபடியும் அப்படியொரு சோதனைக்கு பயப்படுறாராம்... பயப்படுறாராம்... ஒரு படத்துக்கு அந்த மாதிரி மத்த பாடல்களை கிண்டலடிச்சி பாட்டு ரெடி பண்ண சொன்னாங்களாம். அய்யோ ஆள விடுங்கன்னு இசை ஒரே ஓட்டம் ஓடிட்டாராம்... ஓடிட்டாராம்... ஏற்கனவே போட்ட இசையை மத்த இசையமைப்பாளருங்க எதிர்த்ததாலதான் இந்த ஓட்டமாம்... ஓட்டமாம்...