சீனியர், ஜூனியர் வித்தியாசம் இல்லை எல்லோருடனும் நடிப்பேன் : இனியா
சென்னை: சீனியர்களுடன் மட்டும் நடிப்பதாக என் மீது முத்திரை விழாமல் பார்த்துக்கொள்வேன் என்கிறார் இனியா. ‘வாகை சூடவாÕ படத்தில் விமல் ஜோடியாக நடித்தவர் இனியா. அவர் கூறியதாவது: பாரதிராஜாவின் ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்Õ படத்தில் அமீர் ஜோடியாக நடிக்கிறேன். இப்படத்தின் கதைபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று எனக்கு பாரதிராஜா கட்டுப்பாடு விதித்திருக்கிறார். ‘வாகை சூட வாÕ போலவே தாவணி அணிந்து நடிக்கிறேன். ஆனால் கோபக்காரி வேடம். சில காட்சிகளில் மாட்டு வண்டி ஓட்டுகிறேன்.
அமீர் ஜோடியாக நடிப்பது பெருமை. சினிமாவில் புதுமுகமான விமலுடன் நடித்தேன். சீனியரான அமீருடனும் நடிக்கிறேன். ஆனால் சீனியர்களுடன் மட்டும்தான் இனியா நடிப்பார் என்ற முத்திரை என் மீது விழுந்துவிடக் கூடாது. எல்லா ஹீரோவுடனும் நடிப்பேன். பாரதிராஜா படம் என்பதால் எனது நடிப்பை ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.