ஐஸ்வர்யா குழந்தைக்கு ‘ஏ’வா, ‘கே’வா?
சென்னை: ஐஸ்வர்யா ராய்க்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அதற்கு மீடியா ஜாதகம் கணித்து வெளியிடக்கூடாது என அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத¢தார். இந்நிலையில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவு செய்ய அமிதாப், அபிஷேக், மாமியார் ஜெயா பச்சனுடன் ஐஸ்வர்யா ஆலோசித்து வருகிறார். அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ஆகியோரது பெயர்களின் முதல் எழுத்து, ஏ.
எனவே தனது மகளின் பெயரும் ஏயில் தொடங்க வேண்டும் என ஐஸ்வர்யா விருப்பம் தெரிவித்துள்ளாராம். ‘கே’யில் ஆரம்பிக்கலாம் என்று ஐடியா சொல்கிறார்கள் நியூமராலஜிஸ்ட்கள். கடவுள் நம்பிக்கையும், ஜாதக நம்பிக்கையும் கொண்ட குடும்பம் என்பதால் குழந்தை பிறந்த நேரத்தை கணக்கிட்டு ஜோதிடரின் ஆலோசனைப்படி பெயர் வைக்கப்படும் என அமிதாப் குடும்பம் தெரிவித்தது.