இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரில் துபையில் ஜனவரி மாதம் மோதுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் உள்ளிட்ட இங்கிலாந்து அணியின் வீரர்கள் புனே மற்றும் மும்பையில் பயிற்சி பெற உள்ளனர்.
சவுரப் திவாரி விலகல்!
ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் சவுரப் திவாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெருக்கடி காரணமாக தன்னால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
8 வயது வீராங்கனை சாதனை!
ஜகார்த்தாவில் நடந்து வரும் தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் மலேசியாவின் 8 வயது வீராங்கனையான அலியா யங்க் நீர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இளம் வயதில் வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook