ஹாக்கி சீரியசில் 150 பேர்!
உலக சீரியஸ் ஹாக்கி போட்டிகள் (டபிள்யூ.எஸ்.ஹெச்) அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியில் உள்ள முன்னணி வீரர்கள் உள்பட 150 பேர் பங்கேற்கின்றனர். இதற்காக வீரர்களுக்கு லட்சகணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று பயிற்சியில் இந்திய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.