ஜோதிகா, குழந்தைகளுடன் ஆப்ரிக்கா போகிறார் சூர்யா!
சென்னை: ஜோதிகா, குழந்தைகளுடன் விரைவில் ஆப்ரிக்கா போகப்போவதாக கூறினார் சூர்யா. இதுபற்றி அவர் கூறியதாவது: கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அழகான இடம் ஆப்ரிக்கா. மனைவி ஜோதிகா, குழந்தைகள் தியா, தேவ் ஆகியோரை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்கு நீண்டநாளாக ஆசை. இரவு நேரத்தில் காட்டுக்குள் வாகனத்தில் சென்று புலி, யானை போன்ற மிருகங்களை காண்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஏற்கனவே Ôஅயன்Õ பட ஷூட்டிங்குக்காக ஆப்ரிக்கா சென்றிருக்கிறேன்.
குடும்பத்தினருடன் பொழுதை கழித்து நீண்ட நாள் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் கோடை விடுமுறைக்கு டூர் அழைத்துச் செல்கிறேன் என்று அவர்களிடம் சொல்வேன். ஏதாவது ஒரு வேலையில் பிஸியாகிவிடுவதால் சொன்னபடி நடக்க முடிவதில்லை. அதற்காக அவர்கள் ஒருபோதும் என்னிடம் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை விரைவில் ஆப்ரிக்கா அழைத்துச் செல்வேன். இவ்வாறு சூர்யா கூறினார்.