ரஜினி படத்துக்கு பெயர் மாறுகிறது : சவுந்தர்யா
சென்னை: ‘ரஜினி நடிக்கும் அனிமேஷன் படத்துக்கு விரைவில் பெயர் மாறுகிறது’ என்றார் சவுந்தர்யா. டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் இணைந்தார் சவுந்தர்யா ரஜினி. இதில் இடம்பெற்ற சில நாட்களிலேயே 1700க்கும் அதிகமானவர்கள் அவரது பக்கத்தில் வாசகர்களாக சேர்ந்து விட்டனர். இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது:
இத்தனை நாள் டுவிட்டர் பக்கத்தில் இணையாமல் இருந்துவிட்டேன். இப்போது அதற்கு அடிமையாகிவிட்டேன். என்னுடைய எதிர்கால திட்டங்களை பற்றியும், என் அப்பா ரஜினி பற்றியும் அறிந்துகொள்வதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ‘சுல்தான் தி வாரியர்’ எனது கனவு படைப்பு. அதை முடிப்பதில் சில தடைகள் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் அவை நீக்கப்பட்டு புதிய பெயருடன் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளேன்.