முட்டாள்கள் வாயை ‘ஜிப்’ வைத்து தைப்பேன் : கங்கனா கோபம்
மும்பை: ‘‘என்னைப்பற்றி தவறான தகவல் பரப்பும் முட்டாள்கள் வாயை ‘ஜிப்’ வைத்து தைப்பேன்’’ என்றார் கங்கனா ரனவத். பாலிவுட் கவர்ச்சி ஹீரோயின் கங்கனா ரனவத். இவர் ‘கிரிஸ் 3’ என்ற படத்தில் பல்வேறு சக்திகள் கொண்ட சூப்பர் உமனாக நடிக்கிறார். அவரிடம், ‘உண்மையில் உங்களுக்கு சூப்பர் பவர் கிடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டதற்கு சூடாக பதில் அளித்தார்.
‘‘எனக்கு சூப்பர் பவர் கிடைத்தால் அதை வைத்து மேஜிக் செய்து மக்கள் வாயை மூட வைப்பேன். எல்லோரையும் குறிப்பிடவில்லை. இந்த பூமியில் சில முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாயை ‘ஜிப்’ வைத்து தைக்க விரும்புகிறேன்’’ என்றார்.