Untitled Document
2011
13
Nov
கிரிக்கெட் வீரர் அஸ்வின் பள்ளி தோழியை மணந்தார் !


சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம் பெற்றார். தற்போது அவர் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்கிறார். ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் அவருக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. 25 வயதான அஸ்வின் டெல்லியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் 9 விக்கெட் கைப்பற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.  
சென்னையை சேர்ந்த அஸ்வினுக்கும், அவருடன் பள்ளி தோழி பிரீத்திக்கும் கடந்த மே மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அஸ்வின்பிரீத்தி திருமணம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடந்தது.  
இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்தியாவெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக திருமணம் முடிந்த இன்றே அஸ்வின் கொல்கத்தா புறப்பட்டு செல்கிறார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க
yuvaraj - tirupur
11/13/2011 -- 18:5:19

வாழ்த்துக்கள் அஷ்வின் .

rafik - pudukkottai
11/14/2011 -- 0:9:13

திருமண வாழ்துக்கள் வெற்றியோடு வா வீர தமிழ் மகனே

murugesh - pattukkottai
11/14/2011 -- 8:47:52

தமிழகத்தில் முதல் முறையாக மற்றும் முன்னணி வீரராக திகழும் அஸ்வின் மிக சிறப்பான சுழற்பந்து வீச்சாளர். எவடின் திருமண மற்றும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய எனது இனிய வழ்த்துக்கள்.நன்றி அஷ்வின்.இப்படிக்கு முருகேஷ்.பட்டுக்கோட்டை.அதம்பை தெற்கு.

Raja md - DubaiDIP
11/14/2011 -- 10:7:35

வாழ்கா வளமுடன்..!!!!!

saravan - Chennai
11/14/2011 -- 11:20:17

திருமண வாழ்துக்கள் வாழ்க வளமுடன்.....

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,