Untitled Document
2011
07
Nov
வெனிசுலா அழகி ‘மிஸ் வேர்ல்டு’: லண்டனில் கோலாகல விழா!


லண்டன்: லண்டனில் நடந்த ‘மிஸ் வேர்ல்டு’ அழகி போட்டியில் வெனிசுலா அழகி இவியன் சர்கோஸ் (22) வெற்றி பெற்றார். ‘மிஸ் வேர்ல்டு’ அழகி போட்டி 1951-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மிஸ் வேர்ல்டு சங்கம் என்ற அமைப்பு இப்போட்டியை நடத்தி வருகிறது. 61-வது ‘மிஸ் வேர்ல்டு’ போட்டி லண்ட னில் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து 113 அழகிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அந்தந்த நாடுகளில் நடந்த அழகி போட்டிகளில் (‘மிஸ் இந்தியா’ போல) பட்டம் வென்றவர்கள். நீச்சல் உடை, பாரம்பரிய உடை, விளையாட்டு திறன், அறிவுக்கூர்மை என பல சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. எடின்பர்க், ஸ்காட்லாந்துக்கும் சென்று பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளில் அழகிகள் பங்கேற்றனர். போட்டியின் இறுதி சுற்று போட்டி லண்டனின் யேர்ல்ஸ் கோர்ட் அரங்கத்தில் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் முதலிடம் பிடித்த வெனிசுலா அழகி இவியன் சர்கோஸ் (22) ‘மிஸ் வேர்ல்டு’ பட்டம் பெற்றார். கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அமெரிக்க அழகி அலெக்சாண்ட்ரியா மில்ஸ், வைர கிரீடத்தை அவருக்கு சூட்டினார். பிலிப்பைன்ஸ் அழகி வெண்டோலின் ரியாஸ், போர்ட்டாரிகோ அழகி அமண்டா விலனோவா 2, 3-வது இடங்களை பிடித்தனர். இந்த ஆண்டில் ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற மும்பை அழகி கனிஷ்தா டங்கர் இப்போட்டியில் கலந்துகொண்டார். ‘டாப் மாடல்’ என்ற பிரிவில் முதல் 20 அழகிகளில் ஒருவராக அவர் தேர்வாகியுள்ளார். மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற இவியன் சர்கோஸ், தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் குவனாரே நகரை சேர்ந்தவர். 8 வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்ததால், கோஸ்டஸ் நகரில் உள்ள கான்வென்டில் வளர்ந்தவர். அரசியல் பட்டப் படிப்பு படித்து வருகிறார். மாடலிங் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,